தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி GT Neo3

150W சார்ஜிங் வசதியுடன் அடுத்த வாரம் இந்தியா வரும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்!

Published On 2022-04-18 08:07 GMT   |   Update On 2022-04-18 08:07 GMT
ரியல்மி நிறுவனம் தனது புதிய GT Neo3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய தகவலை ரியல்மி இந்தியா சி.இ.ஒ. மாதவ் சேத் யூடியூபில் “AskMadhav” நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார். 

இத்துடன் 150W சார்ஜிங் கொண்ட GT Neo3 மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் GT Neo3 ஸ்மார்ட்போனின் 80W மற்றும் 150W என இரண்டு வேரியண்ட்களும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகி விட்டது. 



ரியல்மி GT Neo3 அம்சங்கள்:

- 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோரா மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5nm பிராசஸர்
- மாலி-G510 MC6 GPU
- 6GB / 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 8GB / 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, OIS, f/1.88, LED ஃபிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.25
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ 
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி, 80W சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4500mAh பேட்டரி, 150W அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
Tags:    

Similar News