தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோ G50

குறைந்த விலை போனுக்கும் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கும் மோட்டோரோலா

Published On 2022-04-18 11:19 IST   |   Update On 2022-04-18 11:19:00 IST
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மெல்ல ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கும் பணிகளை துவங்கி இருக்கிறது. இந்த வரிசையில், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த புது அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன் மாடலாக மோட்டோ G50 இருக்கிறது.

முன்னதாக இம்மாத துவக்கத்தில் மோட்டோ G200 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மோட்டோ G50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. 

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G50 ஸ்மார்ட்போனிபல் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 12 அப்டேட் SIRF32.27-25 எனும் பில்டு நம்பர் கொண்டிருக்கிறது. இது பிரிட்டனில் விற்பனை செய்யப்பட்டு இருக்கும் XT2137-DS மாடலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 



பிரிட்டனை தொடர்ந்து மற்ற நாடுகளில் விற்பனையாகி வரும் மோட்டோ G50 ஸ்மார்ட்போனிற்கும் இதே அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா நிறுவனத்தின் சாஃப்ட்வேர் அப்டேட் பக்கத்தில் மோட்டோ G50 மாடலுக்கான ஆண்ட்ராய்டு 12 அப்டேட் இன்னும் வெளியாகவில்லை என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

எனினும், இந்த ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பீட்டா வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் ஆண்ட்ராடய்டு 12 ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படலாம்.

Similar News