தொழில்நுட்பச் செய்திகள்
பல்வேறு புது அம்சங்கள் - டெலிகிராமில் வெளியான அசத்தல் அப்டேட்
டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அப்டேட்டில் பல்வேறு புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.
குறுந்தகவல் செயலிகளில் புதுமை டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் புது அப்டேட் வழங்கி வருகிறது. இந்த அப்டேட் செயலியின் நோட்டிபிகேஷன் டோன், கான்வெர்சேஷன் மியூட் செய்ய கஸ்டம் டைமிங், ஆட்டோ டெலிட் மெசேஜ், சிறப்பான ஃபார்வேர்டிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை வழங்கி இருக்கிறது.
கஸ்டம் நோட்டிபிகேஷன் சவுண்ட்:
தற்போது டெலிகிராம் செயலியில் உங்களின் மியூசிக் கலெக்ஷனில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் சவுண்ட்களை அலெர்ட் டோனாக செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்ய செயலியின் செட்டிங்ஸ் -- நோட்டிபிகேஷன்ஸ் -- சவுண்ட்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
இன்டிவிஜூவல் கான்வெர்சேஷன் அல்லது முழு குரூப்களை பெர்சனலைஸ் செய்ய புது டோன்கள் அல்லது சவுண்ட்களை செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது குரூப்பில் இருந்து மெசேஜ் வருவதை, நோட்டிபிகேஷன் சவுண்ட் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.
கஸ்டம் மியூட் டியுரேஷன்ஸ்:
தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் நோட்டிபிகேஷன்களை வராமல் தடுக்க, அவற்றை பாஸ் செய்ய முடியும். சிறுது நேர உறக்கம் அல்லது வேறு ஏதேனும் பணி சூழலில் ஈடுபடும் போது நோட்டிபிகேஷன்களால் வரும் தொந்தரவுகளை இந்த அம்சம் மூலம் தவிர்க்க முடியும்.
ஆட்டோ டெலிட் மெனு:
ஆட்டோ டெலிட் அம்சத்தை ஏதேனும் ஒரு காண்டாக்டிற்கு ஆட் செய்ய முடியும். இந்த அம்சத்தை இரண்டு நாட்கள், மூன்று வாரங்கள், நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலக்கட்டம் வரை செட் செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்வதும் மிக எளிமையானது தான்.