தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி ஜிடி 2 ப்ரோ

2K Resolution உள்ளிட்ட மிரட்டும் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் ரியல்மி ஜிடி2 ப்ரோ

Published On 2022-04-14 10:59 IST   |   Update On 2022-04-14 10:59:00 IST
அறிமுக விலையாக இந்த போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.44,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் ரூ.52,999க்கும் கிடைக்கும்.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி ஜிடி2 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட், Bio-polymer-ல் தயாரிக்கப்பட்ட பேக் பேனல், 120Hz ரெஃப்ரெஷ் ரெட்டுடன் 2கே ரெஷலியூஷன் கொண்ட டிஸ்பிளே, LTPO2 AMOLED பேனல், 1Hz ரெஃப்ரெஷ் ரேட் வரை  செல்லக்கூடிஉய டிஸ்பிளே ஆகியவை தரப்பட்டுள்ளன.

கேமராவை பொறுத்தவரை இதில் IMX766 சோனி சென்சாருடன் கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 150 டிகிரி ஃபீல்ட் ஆஃப் விஷன் கொண்ட 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 40X மைக்ரோ லென்ஸ் அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. 

5000mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ள இந்த போனின் 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.49,999 ஆகும். 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.57,999-ஆகும்.

அறிமுக விலையாக  இந்த போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.44,999க்கும், 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் ரூ.52,999க்கும் கிடைக்கும்.

Similar News