தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோவின் அறிவிப்பு

ரூ.7200 கேஷ்பேக்- ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பு

Update: 2022-04-08 12:16 GMT
ஜியோ வழங்கும் ரூ.7200 மதிப்பிலான கூப்பன்கள் இந்த ஆண்டு இறுதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஜியோ புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

இதன்படி ஜியோ வாடிக்கையாளார்கள் புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கினால்ரூ.7200 அளவிலான கேஷ்பேக் வழங்கப்படும்.  ஆனால் இந்த கேஷ்பேக் மொத்தமாக வழங்கப்படாது. ரூ.150 தள்ளுபடி கூப்பனாக 48 கூப்பன்கள் மை ஜியோ செயலி மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த சலுகை ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய வேரியண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் ஜியோ கூறியுள்ளது. மேலும் ஜியோ வாடிக்கியாளர்கள் ரூ.1199 திட்டத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தினம் 3ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், ஜியோ செயலி சந்தா ஆகியவை 84 நாட்களுக்கு வழங்கப்படும். 

இந்த கூப்பன்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும். போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடையாது.
Tags:    

Similar News