தொழில்நுட்பச் செய்திகள்
ஃபேஸ்புக்

4 ஆண்டுகளாக ஃபேஸ்புக்கை கலங்கடித்த பிரச்சனை- தலையை பிய்த்துக்கொண்ட ஊழியர்கள்

Published On 2022-04-02 12:49 IST   |   Update On 2022-04-02 12:49:00 IST
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த பிரச்சனை ஃபேஸ்புக்கில் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் போலி செய்திகளை பரவுவதை தடுக்க தனது நியூஸ்ஃபீட் ரேங்கிங் அலாகரித்தத்தில் மாற்றத்தை செய்தது. ஆனால் அந்த அலாகரித்தம் போலி செய்திகளை தடுப்பதற்கு பதில் அதிகம் பரவுவதற்கு வழிவகுத்துவிட்டது. இதனால் ஃபேஸ்புகில் போலி செய்திகளின் பரவல் உலகம் முழுவதும் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர ஆபாச பதிவுகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் ஆகியவையும் அதிகம் பரபப்பட்டதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு உருவான இந்த ’பக்’ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தீவிரமாக செயல்பட தொடங்கியது. பின் கடந்த மாதம் மார்ச் 11-ம் தேதி தான் இந்த பிரச்சனையை ஃபேஸ்புக் சரி செய்தது. ஃபேஸ்புக் விஞ்ஞானிகளே கண்டுபிடிக்க முடியாத வகையில் இதன் ஆலாகரித்தம் கடினமாக ப்ரோகிராம் செய்யப்பட்டதால் இந்த பிரச்சனை தீர்க்க முடியாதபடி இருந்துள்ளது.

இந்த பிரச்சனை காரணமாக ஏராளமான பயனர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையே குறைந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த ’பக்’ முடிவுக்கு வந்துவிட்டதால் இனி பேஸ்புக்கில் போலி செய்திகள், ஆபாச பதிவுகள் பரவுவது பெருமளவில் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News