தொழில்நுட்பச் செய்திகள்
ஏர்டெல்

ஒவ்வொரு மாதமும் ரூ.7000 தரப்போகும் ஏர்டெல்- யாருக்கு தெரியுமா?

Published On 2022-03-24 12:09 IST   |   Update On 2022-03-24 12:09:00 IST
சமீபத்தில் தந்தையான ஆண் ஊழியர்களும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரம் விடுமுறை எடுத்துகொள்ளலாம் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. அந்நிறுவனம் தனது பெண் ஊழியர்கள் யாருக்கேனும் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது.

குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகும் வரை ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பெண் ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்தாலும் இந்த தொகை வழங்கப்படும் என கூறியுள்ளது.



இதைத்தவிர பெண் ஊழியர்கள் 26 வாரங்கள் மகப்பேறு விடுமுறை எடுத்துகொள்ளலாம், அதன்பிறகு 24 வாரங்களுக்கு தாங்கள் விரும்பும் நேரங்களில் வேலை செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இத்துடன் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என ஒரு வருடத்திற்கு கூடுதல் விடுமுறையும் வழங்கப்படவுள்ளது.

அதேபோல சமீபத்தில் தந்தையானவர்களும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்த்துகொள்ள 8 வாரங்களுக்கு விடுமுறை எடுத்துகொள்ளலாம் அறிவித்துள்ளது.

Similar News