தொழில்நுட்பச் செய்திகள்
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் பழைய அம்சம்

Published On 2022-03-24 11:01 IST   |   Update On 2022-03-24 11:01:00 IST
இந்த ஃபேவரைட் ஆப்ஷனுக்கு சென்று பயனர்கள் தங்களுக்கு பிடித்த 50 கணக்குகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் செயலி உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் மக்களை வெகுவாக ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றன.

இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் விரும்பும் வகையில் புது புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டபோது இருந்து, பிறகு நீக்கப்பட்ட அம்சம் ஒன்று தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி ஹோம்ஃபீடை (Home Feed) பயனர்கள் இனி தாங்கள் விரும்பும் வகையில் மாற்றிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹோம்ஃபீடில் Following, Favourites என்ற இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும். பயனர்கள் ஃபாலோயிங் என்ற ஹோம்ஃபீடை தேர்ந்தெடுத்தால், அவர்கள் பின் தொடரும் அனைத்து கணக்குகளில் இருந்தும், அவர்கள் அதிகம் பார்க்கும் தகவல்களின் அடிப்படையில் பரிந்துரைகளும் பதிவுகளாக ஹோம் ஃபீடில் காட்டப்படும்.



இதுவே பயனர்கள் ஃபேவரைட்ஸ் என்ற ஹோம்ஃபீட்டை தேர்ந்தெடுத்தால், தங்களுக்கு பிடித்த கணக்குகளில் இருந்து வரும் பதிவுகளை மட்டும் பார்த்துகொள்ளலாம். 

இந்த ஃபேவரைட் ஆப்ஷனுக்கு சென்று பயனர்கள் தங்களுக்கு பிடித்த 50 கணக்குகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம். அந்த 50 கணக்குகளில் பதிவிடப்படும் தகவல்கள் மட்டும் ஃபேவரைட் ஆப்ஷனில் காட்டப்படும்.

Similar News