தொழில்நுட்பச் செய்திகள்
மேஜிக்புக் எக்ஸ் சீரிஸ் லேப்டாப்

குறைந்த விலையில் ஹானர் அறிமுகம் செய்யவுள்ள மேஜிக்புக் லேப்டாப்கள்

Published On 2022-03-21 13:10 IST   |   Update On 2022-03-21 13:10:00 IST
இந்த சீரிஸில் மேஜிக்புக் எக்ஸ்14 மற்றும் எக்ஸ் 15 என்ற இரண்டு லேப்டாப்கள் இடம்பெற்றுள்ளன.
ஹானர் நிறுவனம் புதிய மேஜிக்புக் எக்ஸ் சீரிஸ் லேப்டாப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸில் மேஜிக்புக் எக்ஸ்14 மற்றும் எக்ஸ் 15 என்ற இரண்டு லேப்டாப்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த லேப்டாப்களில் இன்டல் 10-வது ஜெனரேஷன் பிராசஸர்கள் Core i5-10210U மற்றும்  Core i3-1010U ஆப்ஷன்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த லேப்டாப்கள் குறைந்த விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள்:-

  • 14-இன்ச் / 15-இன்ச்  1920 x 1080 பிக்ஸல்கள் 16:9 டிஸ்பிளே, TÜV Rheinland Certified
  • 2.1 GHz (4.1GHz வரை) Core i3-10110U dual-core / 1.6GHz (up to 4.2GHz) Core i5-10210U quad-core பிராசஸர் இன்டல் UHD கிராப்பிக்ஸுடன் இடம்பெற்றுள்ளது
  • 8ஜிபி / 16ஜிபி 2666MHz DDR4 டூயல் சேனல் ரேம், 256ஜிபி / 512ஜிபி எஸ்.எஸ்.டி
  • விண்டோஸ் 10 ஹோம்
  • 3.5mm ஆடியோ ஜாக், ஃபிங்கர் பிரிண்ட் பவர் பட்டன்
  • பாப்-அப் வெப் கேம்
  • மேஜிக் லிங்க் 2.0
  • வைஃபை 802.11 ac (டூயல்-பேன்ட்), ப்ளூடூத் 5.0, USB டைப்-சி x 1 (சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்பர் சப்போர்ட்டுடன்), HDMI x 1, USB3.0 (Type A) x 1, USB2.0 (Type A) x 1
  • X 14 டைமென்சன்கள்: 409 x 283 x 72mm; எடை: About 1.38kg
  • X 15 டைமென்சன்கள்: 475 x 283 x 72mm; எடை: About 1.56kg
  • மேஜிக் புக் X 14– 56Wh பேட்டரி  13.2h லோக்கல் வீடியோ பிளேபேக் வரை
  • மேஜிக்புக் 15 – 42Wh பேட்டரி 7h லோக்கல் பிளேபேக் வரை

Similar News