தொழில்நுட்பச் செய்திகள்
ஒன்பிளஸ் டிவி Y1S

4கே டிஸ்பிளேவுடன் வரவுள்ள ஒன்பிளஸ் டிவி Y1S ஸ்மார்ட் டிவி

Published On 2022-03-19 12:37 IST   |   Update On 2022-03-19 12:37:00 IST
இந்த டிவியில் 8ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் டிவி Y1S  ஸ்மார்ட்டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த டிவி 43 இன்ச் அளவில், 4கே ரெஷலியூஷனுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவியில் 8ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருக்கும் என்றும், இந்த டிவி ஆண்ட்ராய்டு டிவி 10 ஓ.எஸ்ஸில் இயங்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டெண்ட், அமேசான் அலெக்சா, டால்பி ஆடியோ, டால்பி அட்மாஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும்,  இதில் 24W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிவி இந்திய மத்திப்பில் ரூ.65,000-ஆக இருக்கும் என கருதப்படுகிறது.

Similar News