தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மி கே50

2கே டிஸ்பிளே, 108 எம்.பி கேமராவுடன் வெளியாகும் ரெட்மி கே50 சீரிஸ்

Published On 2022-03-19 05:29 GMT   |   Update On 2022-03-19 05:29 GMT
ரெட்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான இதில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ரெட்மியின் கே 50 மற்றும் கே 50 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதில் ரெட்மி கே50 ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 8100 SoC பிராசஸர், 6.7 இன்ச் 2கே AMOLED பேனல், ஹெச்.டி.ஆர்10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட்டை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 Hz டச் சாம்பிளிங் ரேட் தரப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை கே 50 கேமராவில் 48 MP Sony IMX582 பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸச்ல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட், 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன.

மேலும் இதில் 5,500 mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் தரப்பட்டுள்ளது.

இந்த போனின் 8ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.28,700-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி/256ஜிபி மற்றும் 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.31,000 மற்றும் ரூ.33,450-ஆகவும் இருக்கிறது.



ரெட்மி கே50 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 9000 பிராசஸர், 6.7 இன்ச் 2கே ஆமோலெட் பேனல் HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட்டுடன் கிடைக்கிறது. 

கேமராவை பொறுத்தவரை இந்த போனில் 108 மெகாபிக்ஸல் Samsung 1/1.52 இன்ச் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் ஷூட்டர், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ யூனிட், 20 மெகாபிக்ஸல் சோனி IMX596 செல்ஃபி கேமரா தரப்பட்டுள்ளன.

5000 mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த போனின் 8ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.39,450-ஆகவும், 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.43,000-ஆகவும் இருக்கிறது. இந்த போனின் டாப் மாடல் 12ஜிபி/512ஜிபி வேரியண்டின் விலை ரூ.47,800-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன் இந்தியாவில் வெளியாகும் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
Tags:    

Similar News