தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோமி, ஒப்போ, விவோ நிறுவனங்கள்

பெரிய திட்டத்திற்காக இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

Published On 2022-03-11 09:49 GMT   |   Update On 2022-03-11 09:53 GMT
இந்தியாவின் லாவா, டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுடன் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
சீனாவில் 3 முக்கிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஜியோமி, ஒப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் போன்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  இதன்மூலம் எலக்ரானிக்ஸ் உற்பத்திக்கான மையமாக இந்தியா உருவாகும் என தெரிவித்துள்ளன.

இந்தியாவின் லாவா இண்டர்நேஷனல், டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் லாவா, டிக்ஸனின் தொழிற்சாலைகளில் அசம்பிள் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சந்தைகளை கைப்பற்றியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உலக அளவில் தங்களை நிறுவிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் சீனா -அமெரிக்கா பிரச்சனையின் காரணமாக ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகளை எட்டவில்லை என்றும், இந்தியாவில் இருந்து போன்கள் தயாரிக்கும்பட்சத்தில் எளிதாக உலக சந்தையை எட்ட முடியும் எனவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News