தொழில்நுட்பச் செய்திகள்
மார்த்தா வாசுயுடா

ரஷியா-உக்ரைன் போரினால் ஒரே இரவில் டிக்டாக் நட்சத்திரமாக மாறிய பெண்

Published On 2022-03-10 12:35 IST   |   Update On 2022-03-10 12:38:00 IST
இவரது அனைத்து வீடியோக்களும் வைரலாகி வருவதாகவும், பிபிசி உள்ளிட்ட பெரும் செய்தி நிறுவனங்களே இவரது வீடியோக்களை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உக்ரைன் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டை சேர்ந்த ஒரு பெண் மிகப்பெரிய டிக்டாக் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

உக்ரைனை சேர்ந்த 20 வயது பெண்ணான மார்தா வாசுயுடா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தனது பொழுதுபோக்கிற்காக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இவருக்கு சில நூறு பார்வையாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் உக்ரைன் - ரஷியா போர் ஆரம்பித்த ஒரே இரவில் போர் சம்பந்தமான வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிட்டு டிக்டாக் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.



தனது தோழி ஒருவரை சந்திக்க அவர் பிரிட்டன் சென்றிருந்தபோது ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தது. இதையடுத்து அவர் உக்ரைனில் உள்ள நண்பர்களின் டெலிகிராம் சேனல்களுக்கு சென்று அவர்கள் பதிவிடும் வீடியோக்களை எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஒரே இரவில் 1 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளார். 

இவரது அனைத்து வீடியோக்களும் வைரலாகி வருவதாகவும், பிபிசி உள்ளிட்ட பெரும் செய்தி நிறுவனங்களே இவரது வீடியோக்களை எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News