தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோ போன்

விலை ரூ.6,499 மட்டுமே...இன்று முதல் கடைகளில் கிடைக்கும் ஜியோ ஸ்மார்ட்போன்

Update: 2022-03-07 08:22 GMT
இந்த போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் QM 215 சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இன்று முதல் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமாகி ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த போன் கடைகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 5.45 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் புரொடக்‌ஷன், குவால்காம் ஸ்நாப்டிராகன் QM 215 சிப்செட், குவாட் கோர் பிராசஸர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும், 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்றுள்ளது.இந்த போன் ஆண்ட்ராய்டு 11 கோ ஓஎஸ்ஸை அடிப்படையாக கொண்ட பிரகதி ஓ.எஸ்ஸில் இயங்கும். இந்த போனில் பல ஜியோ செயலிகள் இடம்பெற்றுள்ளன.

3,500mAh பேட்டரி, 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி  கொண்ட இந்த போனின் விலை கடைகளில் ரூ.6,499-ஆகும். 
Tags:    

Similar News