தொழில்நுட்பச் செய்திகள்
பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் போக்கோ எம்4 ப்ரோ
இன்று மதியம் விற்பனைக்கு வரும் இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்4 ப்ரோ இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனில் 6.43 இன்ச் AMOLED டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ்ரேட் மற்றும் 1000 nits பிரைட்னஸுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் octa-core MediaTek Helio G96 SoC பிராசஸர், ஆண்ட்ராய்டு 11, MIUI 13 ஓ.எஸில் இந்த போன் இயங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை 64 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 118 டிகிரி 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுளன.
மேலும் இதில் லிக்விட் கூல் தொழில்நுட்பம் 1.0, டயனமிக் ரேம் எக்ஸ்பேஷன் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த போனின் 6 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.14,999-ஆகவும், 6 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.16,499-ஆகவும் மற்றும் 8 ஜிபி ரேம் +256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ, பவர் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது.
இன்று மதியம் விற்பனைக்கு வரும் இந்த போனை ஹெச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.