தொழில்நுட்பச் செய்திகள்
லாவா எக்ஸ்2

ரூ.6,999 விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன்

Update: 2022-03-06 05:30 GMT
மார்ச் 11-ம் தேதி வெளியாகும் இந்த போனை முன்பதிவு செய்து ரூ.400 தள்ளுபடியுடன் ரூ.6,599-க்கு பெறலாம்.
இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா புதிய லாவா எக்ஸ்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போனில் 6.5-inch HD+ IPS டிஸ்பிளே, octa-core MediaTek Helio SoC பிராசஸர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் 8 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்ஸல் செஃல்பி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

5000mAh பேட்டரி, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி ஆகியவை வழங்கப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.6,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 11-ம் தேதி வெளியாகும் இந்த போனை முன்பதிவு செய்து ரூ.400 தள்ளுபடியுடன் ரூ.6,599-க்கு பெறலாம். இந்த போன் நீலம் மற்றும் சியான் நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News