தொழில்நுட்பச் செய்திகள்
பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ள மலிவு விலை பிராட்பேண்ட் திட்டம்- இவ்வளவு குறைந்த விலையா?

Published On 2022-03-05 06:32 GMT   |   Update On 2022-03-05 06:32 GMT
இந்த புதிய திட்டத்தில் 1000 ஜிபி டேட்டா குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.329-க்கு ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த திட்டத்தில் ரூ.329-க்கு வாடிக்கையாளர்கள் 1000 ஜிபி டேட்டாவை, 20 Mbps வேகத்தில் பெறுவர். அத்துடன் ஃபிக்சட் லைன் வாய்ஸ் அழைப்பு இலவசமாக வழங்கப்படும். இதுமட்டும் இல்லாமல் முதல் மாத கட்டண தொகையில் 90 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கு முன் குறைந்த விலை ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமாக பி.எஸ்.என்.எல்லின் ரூ.449 திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் 30Mbps வேகத்தில் 3.3 டிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த புதிய திட்டம் தனி நபர் ஒருவர் இணையம் பயன்படுத்த போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் நாட்டின் சில மாநிலங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் இணையதளத்திற்கு சென்று இந்த திட்டம் தங்கள் இடங்களுக்கு அமலில் உள்ளதா என அறிந்துகொள்ளலாம்.
Tags:    

Similar News