தொழில்நுட்பச் செய்திகள்
படைப்பாளிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் தர இருக்கும் யூடியூப்- ஏன் தெரியுமா?
ஆப்பிள், அமேசான், ஸ்பாட்டிஃபை ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கு யூடியூப் திட்டமிட்டுள்ளது.
யூடியூப் நிறுவனம் போட்கேஸ்ட் படைப்பாளிகள், வீடியோக்களை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2.30 கோடி வரை தருவதற்கு முன்வந்துள்ளது.
இன்று இணையத்தில் வீடியோக்கள் எந்தளவிற்கு மக்களால் பார்க்கப்படுகிறதோ, அதே அளவுக்கு போட்கேஸ்ட் எனப்படும் ஆடியோ வடிவிலான தகவல்களும் விரும்பி கேட்கப்படுகின்றன.
ஆப்பிள், அமேசான், ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட நிறுவனங்கள் போட்கேஸ்ட் உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடுவதற்கு கூகுளும் யூடியூப் மூலம் போட்கேஸ்ட் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கு பணத்தொகை வழங்கவுள்ளது.
போட்கேஸ்ட் எபிசோட்களை வீடியோ வடிவில் எடுப்பதற்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. தனிப்பட்ட படைப்பாளிகளுக்கு ரூ.38 லட்சமும், போட்கேஸ்ட் நிறுவனங்களுக்கு ரூ.2.30 கோடி வரையும் கொடுக்கவுள்ளது.