தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி 9 சீரிஸ்

மிட் ரேஞ்ச் விலையில் மார்ச் 10 வெளியாகும் ரியல்மி 9 சீரிஸ்

Published On 2022-03-05 10:28 IST   |   Update On 2022-03-05 10:28:00 IST
இந்த சீரிஸில் ரியல்மி 9 4ஜி, ரியல்மி 9 5ஜி மற்றும் ரியல்மி 9 5ஜி எஸ்.இ ஆகிய மூன்று போன்கள் இடம்பெறுகிறது.
ரியல்மி நிறுவனம், ரியல்மி 9 சீரிஸை மார்ச் 10-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸில் ரியல்மி 9 4ஜி, ரியல்மி 9 5ஜி மற்றும் ரியல்மி 9 5ஜி எஸ்.இ ஆகிய மூன்று போன்கள் வெளியாகிறது. மிட் ரேஞ்ச் விலையில் அறிமுகமாகவுள்ள இந்த போன்கள் Qualcomm Snapdragon 778 5G SoC மற்றும் MediaTek Dimensity 810 5G SoC ஆகிய பிராசஸர்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த போன்களில் ஃப்ளூயட் லைட் டிசைனை கொண்டிருக்கும், 6 லேயர் யூ.வி கிரைன் புராசஸில் தயாரிக்கப்பட்டுள்ள 8.5 எம்.எம் மெலிதான பேக் பேனல் இடம்பெறும். ரியல்மி 9 5ஜி எஸ்.இ 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ரியல்மி 9 5ஜி 90Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, மீடியா டெக் டைமென்சிட்டி 810 சிப்செட், 6ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸில் இயங்கும், 48 மெகா பிக்ஸல் மெயின் சென்சார், 2 மெகாபிக்ஸல் டெஃப்த் சென்சார், 2 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார் என்ற 3 பின்புற கேமராவையும், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும், சைட் மவுட்ண்டர் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 5000 mAh பேட்டரி, 18W சார்ஜிங் வசதி ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Similar News