தொழில்நுட்பச் செய்திகள்
ஹெச்.டி.சியின் வைவ் தொழில்நுட்பம்

மெட்டாவெர்ஸ் போனை அறிமுகம் செய்யப்போகும் ஹெச்.டி.சி

Update: 2022-03-03 11:25 GMT
இந்த போனுடன் வி.ஆர் ஹெட்செட் மற்றும் பிற வி.ஆர் மற்றும் ஏ.ஆர் சாதனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் பெற்ற நிறுவனமாக இருந்த ஹெச்.டி.சி, தனது பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பை கூகுளிடம் நல்ல விலைக்கு ஒப்படைத்துவிட்டு மெய்நிகர் தொழில்நுட்ப உருவாக்கத்தில் இறங்கியது. அந்த தளத்திற்கு ‘வைவ்’ என பெயரிட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில், ஹெச்.டி.சி நிறுவனம் வைவ் தளத்தின் கீழ் தனது மெட்டாவெர்ஸ் போனை வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. 

இந்த போனுடன் வி.ஆர் ஹெட்செட் மற்றும் பிற வி.ஆர் மற்றும் ஏ.ஆர் சாதனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் மூலம் பயனர்கள் வி.ஆர் மற்றும் ஏ.ஆர் செயலிகளை பயன்படுத்தி மெட்டாவெர்ஸுக்குள் செல்ல முடியும். 

அதீத திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஹெச்.டி.சி நிறுவனம் கடந்த வாரம் தனது புதிய தயாரிப்புகளான மெய்நிகர் கார் அனுபவம், இடம்சார்ந்த பொழுதுபோக்கு, மேலும் வி.ஆர் அனுபவத்தை மேம்படுத்தும் வி.ஆர் பிரவுசர்கள், வி.ஆர் வைவ் கார்டியன் டூல்கள் என பலதரப்பட்ட சாதனங்களை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News