தொழில்நுட்பச் செய்திகள்
ஐபோன் எஸ்.இ 3

குறைந்த விலை மாடலான ஐபோன் SE 3 வெளியாகும் தேதி இது தான்?- கசிந்த தகவல்

Published On 2022-03-02 07:27 GMT   |   Update On 2022-03-02 07:34 GMT
ரூ.25,000 மதிப்பில் வெளியாவதாக எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்.இ 2-ன் ரிலிஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிகழ்சிகளை ஏற்பாடு செய்து தனது சாதனங்களை அறிமுகம் செய்யும்.

பல கட்டங்களாக நடைபெறும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு நிகழ்வின் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வருடத்தின் முதல் ஆப்பிள் நிகழ்வு மார்ச் 8 நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த முதல் நிகழ்வில் புதிய ஐபோன், ஐபேட்  மற்றும் பல சாதனங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், குறிப்பாக ஐபோன் எஸ்இ 3 இந்த நிகழ்வில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த போன் A15 Bionic SoC பிராஸர், ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என்றும், ரூ.25,000 மதிப்பில் இந்த போன் வெளியாகலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
Tags:    

Similar News