தொழில்நுட்பச் செய்திகள்
நத்திங்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யப்போகும் ‘நத்திங்’

Update: 2022-03-02 05:02 GMT
நத்திங் நிறுவனம் பவர் பேங்க், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட 5 சாதனங்களை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் கடந்த ஆண்டு ‘நத்திங்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

அந்நிறுவனம் தனது முதல் சாதனமாக ‘நத்திங் இயர் 1’ ஒயர்லெஸ் இயர்போன்ஸை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது. 

இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு எழுந்த நிலையில், தற்போது புதிய குறைந்த விலை சாதனம் ஒன்றையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக ட்விட்டரில் டீசர் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான தகவலின் படி, அந்த சாதனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.டிரான்ஸ்பரன்ட் பாடி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று நத்திங் நிறுவனம் குறைந்த விலை பவர் பேங்க் உள்ளிட்ட 5 சாதனங்களையும் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News