தொழில்நுட்பச் செய்திகள்
ஒன்பிளஸ், ஜியோ

ஒன்பிளஸ்ஸுடன் இணையும் ஜியோ- ஏன் தெரியுமா?

Published On 2022-03-01 08:21 GMT   |   Update On 2022-03-01 08:21 GMT
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 7 சதவீத மார்க்கெட் பங்குகளை வைத்துள்ளது.
ஜியோ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்களுக்கான கேம் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த கேம்கள் ஜியோ கேம்ஸ் பிளாட்ஃபார்மின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகையில், கேமிங்கிற்காக இது தான் முதல்முறை நாங்கள் வேறு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். மேலும் இந்திய டிவி துறைக்கும் இது புதிய தொடக்கமாக இருக்கும் என கூறியுள்ளது.

ஏற்கனவே ஜியோ கேம்கள் ஸ்மார்ட்போன்கள், செட்டப் பாக்ஸ்கள் ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்டிவியிலும் இடம்பெறவுள்ளன.



ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் டிவி யு1, ஒன்பிளஸ் டிவி Q, ஒன்பிளஸ் டிவி Y12 ஆகியவற்றில் இந்த கேம்கள் இடம்பெறும். மேலும் பழைய மாடல் டிவிக்களுக்கு புதிய அப்டேட்டில் இந்த கேம்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 7 சதவீத டிவிக்களுக்கான மார்க்கெட் பங்குகளை வைத்துள்ளது. தற்போது ஸ்மார்ட் டிவிக்கான தேவை மற்றும் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருவதால் அந்த நிறுவனம் ஆன்லைன் கேமிங்கை டிவிகளுக்கும் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.
Tags:    

Similar News