தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங்

இந்த சேவையில் பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை சாம்சங் தான் கெத்து! - அப்படி என்ன செய்தது?

Update: 2022-02-26 07:11 GMT
சாம்சங்கின் இந்த சேவைக்காகவே அதன் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போன்களுக்கு 70,000 முன்பதிவுகள் வந்துள்ளன.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து மென்பொருள் அப்டேட் கொடுப்பதில் பிற நிறுவனங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் 6 போன்களுக்கு அடுத்த மாதத்திற்கான செக்யூரிட்டி ஆப்டேட் அனுப்புவதற்கு முன்னரே, சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போன்களுக்கு மார்ச் மாதத்திற்கான செக்யூரிட்டி அப்டேட்டை இந்த மாதம் முடிவதற்கு முன்னரே அனுப்பிவிட்டது.

தற்போது சாம்சங் நிறுவனம் மட்டுமே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களில் 4 வருடங்களுக்கு ஓ.எஸ் அப்டேட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 3 வருடங்களுக்கு ஓ.எஸ் அப்டேட்டை வழங்குகிறது.

பிற நிறுவனங்கள் 2 வருட ஓ.எஸ் அப்டேட் மட்டுமே வழங்குகின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு 6 வருட மென்பொருள் அப்டேட்டை வழங்கி வந்தாலும், ஆண்ட்ராய்டு போன்களில் சாம்சங் மட்டுமே அதிகபட்ச மென்பொருள் அப்டேட்டை வழங்கி வருகிறது.தற்போது சாம்சங்கின் 4 வருட ஓ.எஸ் அப்டேட் திட்டம் கேலக்ஸி எஸ்22 சீரிஸ், கேலக்ஸி எஸ்21 சீரிஸ், கேலக்ஸி Z ஃபோல்ட் 3, கேலக்ஸி Z Flip 3 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த திட்டம் பிற போன்களுக்கும் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்கின் இந்த திட்டத்திற்காகவே இந்தியாவில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போனுக்கு 70,000 முன்பதிவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எஸ்22 சீரிஸ் போன்கள் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக அமையவுள்ளன.
Tags:    

Similar News