தொழில்நுட்பச் செய்திகள்
பிராட்பேண்ட்

இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்கள்

Published On 2022-02-24 08:02 GMT   |   Update On 2022-02-24 08:02 GMT
இன்று பலரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதால் இண்டர்நேட் சேவை கட்டாயமாக தேவைப்படும்பட்சத்தில் குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன.
இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியர்களில் பெரும்பாலானோர் மொபைல் டேட்டா தான் இண்டர்நெட்டுக்காக பயன்படுத்தி வந்தாலும், கொரோனா ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு சூழல் பலரையும் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் வகையில் மாற்றியுள்ளது.

வீடுகளில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும், அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கும் ஆரம்பகட்ட குறைந்தவிலை பிராட்பேண்ட் திட்டங்களை ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

இதன்படி ஜியோ தனது ஜியோ ஃபைபர் அடிப்படை திட்டத்தில் மாதம் ரூ.399-க்கு 30 Mbps வேகத்தில் எஃப்.யூ.பி லிமிட்டில் 3.3 டி.பி டேட்டா வழங்குகிறது. 

ஏர்டெல்லை பொறுத்தவரை அடிப்படை திட்டத்தில், மாதம் ரூ.499-க்கு 40 Mbps வேகத்தில், 3.3 டிபி டேட்டா எஃப்.யூ.பி லிமிட்டில் வழங்கப்படுகிறது.



பி.எஸ்.என்.எல் ஃபைபர் பேசிக் பிளான் திட்டத்தில் மாதம் ரூ.449-க்கு 30 Mbps வேகத்தில், 3.3 டிபி டேட்டா எஃப்.யூ.பி லிமிட்டுடன் வழங்கப்படுகிறது.

ஆக்ட் நிறுவனம் மாதம் ரூ.549-க்கு 40 Mbps வேகத்தில் 500 ஜிபி டேட்டா எஃப்யூபி லிமிட்டுடன் கிடைக்கிறது.

இந்த திட்டங்களில் ஜி.எஸ்.டி விலை சேர்க்கப்படவில்லை. 
Tags:    

Similar News