தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ

60 எம்.பி செல்ஃபி கேமராவுடன் இன்று அறிமுகமாகும் மோட்டோ போன்

Update: 2022-02-24 04:58 GMT
இந்த போனின் அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு மோட்டோ யூடியூப் சேனலிலில் ஒளிபரப்பப்படும்.
மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த போனில் 6.7-inch FHD+ AMOLED டிஸ்பிளே 144Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC பிராசஸருடன், 8 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128 ஜிபி யூ.எஃப்.எஸ் 3.1 மெமரியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போனில் பின்பக்கம் மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. 50 மெகா பிக்ஸல் OmniVision OV50A40 பிரைமரி சென்சார், 50 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், செஃல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 60 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5000 mAh பேட்டரி, 68W அதிவேக சார்ஜிங், வைஃபை 6இ உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுவதாக கூறப்பட்டிருக்கும் இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.50,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போனின் அறிமுக நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு மோட்டோ யூடியூப் சேனலிலில் ஒளிபரப்பப்படும்.
Tags:    

Similar News