தொழில்நுட்பச் செய்திகள்
இந்தியாவில் திடீரென விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள ஐபோன் 13- இத்தனை குறைவான விலைக்கு கிடைக்கிறதா?!
ஐபோன் 13 மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டாலும், ஐபோன் 13 மினிக்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு இந்தியாவில் இன்று விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு அமேசான் தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13-ன் பேஸ் மாடல் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.5000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.74,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று ஐபோன் 13-ன் 256 ஜிபி வேரியண்டின் விலையும் ரூ. 89,900-ல் இருந்து ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.84,900-க்கும், 512 ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,09,900-ல் இருந்து விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.1,04,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயன்படுத்தி ஐபோனை வாங்குபவர்களுக்கு ரூ.6,000 உடனடி கேஷ்பேக் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டாலும், ஐபோன் 13 மினிக்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை. மேலும் இந்த விலை குறைப்பு எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.