தொழில்நுட்பச் செய்திகள்
கோப்பு புகைப்படம்

அட்டகாசமான அம்சங்களுடன் 2 ஸ்மார்ட்போன்கள்- டீசரை வெளியிட்டு எதிர்பார்ப்பை கிளப்பிய ரெட்மி நிறுவனம்

Published On 2022-02-23 06:48 GMT   |   Update On 2022-02-23 06:48 GMT
இந்த புதிய போன்கள் மார்ச் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ+ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த டீசர் ஒன்றை  ஜியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி போன் 6.67 FHD+ AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனில் 16 எம்பி முன்பக்க கேமரா சென்சார், பின்புறத்தில் மூன்று கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

இதில் 108 எம்.பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் இடம்பெறலாம் என்றும், இந்த போனில் ஸ்னேப்டிராகன் 695 சிப்செட், 8ஜிபி LPDDR4X ரேம், UFS 2.2 இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 128 ஜிபி மெமரி தரப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த போனில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் தரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ போனை பொறுத்தவரை, 6.67 FHD+ AMOLED டிஸ்பிளே 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படலாம், ஆனால் இந்த போன் MediaTek Helio G96 chipset-ல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் 108 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி சென்சார் கொண்ட 2 கேமராக்கள் என 4 கேமராக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு போன்களும் மார்ச் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News