தொழில்நுட்பச் செய்திகள்
4 புதிய மேக் சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்
இந்த புதிய சாதனங்கள் வரும் மார்ச், மே, ஜூன் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பல சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. அவற்றில் 4 புதிய மேக் சாதனங்களும் அறிமுகமாகவுள்ளன.
இதுகுறித்து வெளியான தகவலில், அந்நிறுவனம் 13 இன்ச் கொண்ட மேக்புக் ப்ரோ, மேக் மினி, 24 இன்ச் ஐமேக் மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்ளை அறிமுகம் செய்யவுள்ளது. இவை அனைத்திலும் எம்2 சிப் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் சொந்த சிப்பை புதிய சாதனங்களில் பயன்படுத்துவது மூலம் இன்டெல் சிப் கொண்ட சாதனங்களில் இருந்து தொடர்ந்து தன்னை வேறுபடுத்தி காட்டி வருகிறது. எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட் கொண்ட ஐமேக் ப்ரோ கணினிகள் 27 இன்ச் ஐமேக் ப்ரோ மற்றும் சிறிய மேக்ப்ரோ கணினிகளால் மாற்றம் செய்யப்ப்படவுள்ளன. இந்த புதிய ஐமேக் ப்ரோவில் 2 அல்லது 4 எம்1 மேக்ஸ் சிப்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
மேக் மினி மாடல், எம்1 ப்ரோ கணினியால் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் எம்2 சிப் கொண்ட ஆரம்ப நிலை மேக்புக் ப்ரோவையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடல் நவம்பர் 2020-ல் வெளியாகி தற்போது பயன்பாட்டில் உள்ள எம்1 மாடலை மாற்றம் செய்யும் என கூறப்படுகிறது.
இந்த புதிய சாதனங்கள் வரும் மார்ச், மே, ஜூன் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.