தொழில்நுட்பச் செய்திகள்
சார்லி மங்கர்

ஐபோனுக்காக கைகளை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கும் மக்கள்- பிரபல கோடீஸ்வரர் கருத்து

Published On 2022-02-19 11:45 IST   |   Update On 2022-02-19 11:45:00 IST
ஆப்பிள் சாதனங்கள் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், அதேசமயம் அதிக விலை கொண்டதாகவும் இருக்கிறது.
உலகின் மிக பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், மேக் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை வெளியிட்டு ஆயிரம் கோடிகளில் லாபம் ஈட்டி வருகிறது. ஆப்பிள் பிராண்டிற்கு என்றே தனி மதிப்பு இருக்கிறது. ஆப்பிள் சாதனங்கள் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், அதேசமயம் அதிக விலை கொண்டதாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் வெளியாகும் ஆப்பிள் ஐபோனை வாங்குவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். சிலர் சிறுநீரகத்தை விற்று  ஆப்பிள் போனை வாங்குவதையும் செய்திகளில் நாம் காண்கிறோம். இந்நிலையில் ஏன் மக்கள் ஐபோனுக்காக கைகளையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று உலக கோடீஸ்வர்களில் ஒருவரான சார்லி மங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறிவதாவது:-

ஆப்பிள் நிறுவனத்தின் பலம் என்ன என்பதை அதன்மீது மக்கள் வைத்திருக்கும் விருப்பதை பார்த்தாலே தெரியும். என்னுடைய கோடிக்கணக்கான நண்பர்கள் ஐபோன் வாங்குவதற்காக தங்களுடைய கைகளை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அது போன்ற ஒரு நிலையில் ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் தான். 



மிகவும் சிறந்தமுறையில் நிர்வாகத்தில் ஈடுபடுவதால் தான் விற்பனை ஏனியில் ஆப்பிள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றும், செமிக்கண்டெக்டர்கள் பற்றாக்குறையும் கூட ஆப்பிளின் வளர்ச்சியை பாதிக்கவில்லை. இந்த வருடமும் ஆப்பிள் ஆர்வத்தை தூண்டும் பல சாதனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு சார்லி மங்கர் தெரிவித்தார்.

Similar News