தொழில்நுட்பச் செய்திகள்
8 ஜிபி ரேமுடன் வெளி வரும் ஐபோன் 14 ப்ரோ?
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் நிலையில் இந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஐபோன் 13 சீரிஸ் பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும் அதன் விலை மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ள ஐபோன் 14 ப்ரோ குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி வர இருக்கும் ஐபோன் 14 ப்ரோ மாடல் 8ஜிபி ரேமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 ப்ரோ மேக்ஸில் 6ஜிபி ரேம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13-ன் தேவை சந்தையில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் உற்பத்தியில் 1 கோடி யூனிட்டுகளை குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பதில் ஐபோன் 14 உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை எடுத்து வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஐபோன் 14 ப்ரோ வெளி வந்தால் பிப்ரவரி 9-ம் தேதி வெளியான சாம்சங் கேலக்ஸி 22 மற்றும் கேலக்ஸி 22+ ஆகிய போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.