தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் மேக்

பேட்டரி சார்ஜ் விரைவாக குறைவதை தடுக்கும் புதிய அப்டேட்

Update: 2022-02-18 08:23 GMT
மேக் கணினிகள் ஸ்லீப் மோடில் இருந்தாலும் விரைவாக சார்ஜ் குறைவதாக புகார்கள் எழுந்தன.
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் கணினிகளாக ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினிகள் இருக்கின்றன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் மேக் கணினிகளுக்கு மேக்ஓஎஸ் 12.2-ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. 

இந்த ஓ.எஸ்ஸில் பல்வேறு பலன்கள் இருந்தாலும் மேக் கணினிகளை ப்ளூடூத்துடன் இணைத்தால் விரைவாக சார்ஜ் குறைவதாக புகார்கள் எழுந்தன. மேலும் கணினிகளை ஸ்லீப் மோடில் வைத்திருந்தாலும் வேகமாக சார்ஜ் குறைவதாக கூறப்பட்டது. முதலில் ப்ளூடூத்தில் தான் பிரச்சனை இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், புதிதாக வந்த ஓ.எஸ் தான் அதற்கு காரணம் என தெரிய வந்தது.இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு புதிய மேக் 12.2.1 வெர்ஷன் ஓ.எஸ்-ஸை வெளியிட்டுள்ளது. இந்த ஓ.எஸ்.எஸை இன்ஸ்டால் செய்தால் பேட்டரி விரைவாக குறையும் பிரச்சனை தீர்ந்து, சார்ஜ் நீடித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட்டுடன் புதிய செக்யூரிட்டி அப்டேட்டுகளும், மேக் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யும் அப்டேட்டும் இடைம்பெறும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News