தொழில்நுட்பச் செய்திகள்
மெய்நிகர் உலகில் உணவகம் தொடங்கும் மெக்டோனல்ட்ஸ்
மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விரும்பியதை செய்யலாம்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தை உருவாக்கி வருவதாக அறிவித்தார்.
மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் இந்த மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விளையாடலாம், நண்பர்களுடன் கூடி அரட்டையடிக்கலாம், பாடம் கற்கலாம், நிலம் வாங்கலாம் மற்றும் விரும்பும் விஷயங்களை செய்யலாம். இணைய உலகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மெட்டாவெர்ஸ் அமையப்போவதாக பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் மெட்டாவெர்ஸில் தங்களை இணைத்துகொள்ளும் முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்களும் இறங்கிவிட்டன. இதன் ஒரு பகுதியாக பிரபல பாஸ்ட் புட் நிறுவனமான மெக்டோனல்ட்ஸும் மெட்டா உலகில் இணையப்போவதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் மெய்நிகர் உலகத்தில் அமைந்துள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்திற்கு பொதுமக்கள் செல்லலாம். அங்கு உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தவுடன், நிஜ உலகத்தில் அந்த உணவு டெலிவரி செய்யப்படும். மேலும் இசை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் மெட்டாவெர்ஸில் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்யும் என தெரிவித்துள்ளது.
இதுதவிர டிஜிட்டல் ஓவியங்கள், இசைகள், வீடியோக்கள் ஆகியவையும் மெட்டாவெர்ஸ் மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெக்டோனல்ட்ஸ் உணவகத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது.