தொழில்நுட்பச் செய்திகள்
இந்தியாவில் இன்று அறிமுகமாகும் ரியல்மி 9 ப்ரோ சீரிஸ்
இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி நிறுவனம் ரியல்மி ப்ரோ 5ஜி, ரியல்மி ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த போன்களில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த போன்களில் MediaTek Dimensity 920 SoC பிராசஸர், Arm Mali-G68 ஜிபியூ வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி 9 ப்ரோ+ போனில் 50 மெகாபிக்சல் Sony IMX766 பிரைமரி சென்சார் ஓ.ஐ.எஸ் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்களால் நகரும் பொருட்களை துல்லியமாக படம் பிடிக்க முடியும்.
மேலும் இந்த இரு போன்களும் சன்ரைஸ் ப்ளூ மற்றும் பெயரிடப்படாத கிரீன் ஆகிய வண்ணங்களில் வர இருப்பதாக கூறப்படுகிறது. ரியல்மி 9 ப்ரோ+ போன் இதய துடிப்பை அளவிடும் சென்சாருடன் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
விலையை பொறுத்தவரை ரியல்மி 9 ப்ரோவின் விலை ரூ.18,999-ல் இருந்தும், ரியல்மி 9 ப்ரோ+ விலை ரூ.24,999-ல் இருந்தும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன்களின் அறிமுக நிகழ்ச்சி ரியல்மி யூடியூப் சேனலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.