தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன்- நிறைகள் என்ன? குறைகள் என்ன?

Update: 2022-02-15 13:36 GMT
ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம், பட்ஜெட் விலையில் பல அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஜியோமி நிறுவனம் பெரும் மதிப்பை பெற்றுள்ளது. இந்திய சந்தைக்கு ஏற்றவாறு குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதன் மூலம் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில், 6.43" அங்குல முழு அளவு எச்டி+ AMOLED திரையுடன், 90Hz ரெப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 180Hz ஹெர்ட்ஸ் வரை டச் சாம்பிளிங், 409 ppi திரை அடர்த்தி, 2400*1080 பிக்சல்களை கொண்டுள்ளது. 

இதில் வழங்கப்பட்டுள்ள 1000nits பீக் பிரைட்னஸ் மூலம் வீடியோக்களை துல்லியமாக காணமுடியும். இந்த விலை மதிப்பில் சிறந்த டிஸ்ப்ளே தரும் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும்.

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 ஆக்டாகோர் சிப்செட் உதவியுடன் இயங்குகிறது. இதன்மூலம் அதிவேகமான செயல்பாடு, பல செயலிகளை பயன்படுத்தும்போது குறைந்த மின்செலவு ஆகியவற்றை உறுதி செய்கிறது. 

இதில் கிராபிக்ஸ் எஞ்சினாக அட்ரினோ 610 செயல்படுகிறது. மேலும் இதில் 4ஜிபி, 6ஜிபி LPDDR4X ரேம் 3 வேரியண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.  64ஜிபி, 128ஜிபி என ஸ்டோரேஜ் வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. UFS2.2 மெமெரியுடன் 1TB வரை எஸ்டி கார்டு பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான புதிய MIUI 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது.கேமராவை பொறுத்தவரை இந்த போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. f/1.8 அப்பெர்ச்சரில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை இதில் உள்ளன. மேலும் செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 13 மெகாபிக்சல் கேமரா அமோலெட் டிஸ்ப்ளேயின் பஞ்ச் ஹோலில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தபோனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. யூஎஸ்பி டைப் சி 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட சார்ஜர் தரப்பட்டுள்ளது.

இரட்டை 4ஜி சிம்,  ஜிபிஎஸ், வைஃபை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ப்ளூடூத் 5.1 ஆகிய அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளன. 

இந்த போன் ஸ்டார்டஸ்ட் வைட், ஹொரிசான் ப்ளூ, ஸ்பேஸ் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 

இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.13,499ஆகவும், 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரியின் விலை ரூ.14,499 ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியின் விலை ரூ.15,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த போனின் குறைகள் என்று பார்த்தால், 5ஜி சேவை வழங்கப்படாதது தான். இந்தியாவில் இந்த நிதியாண்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அனைவரும் 5ஜி சேவை தரும் ஸ்மார்ட்போன்களையே எதிர்பார்க்கின்றனர். மேல்கூறிய அம்சங்களில் 5ஜி அம்சம் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Tags:    

Similar News