தொழில்நுட்பச் செய்திகள்
ஐபோன்

பட்ஜெட் விலையில் ஆப்பிள் ஐபோன்: கசிந்த தகவல்

Published On 2022-02-04 12:38 IST   |   Update On 2022-02-04 12:38:00 IST
இந்தியாவில் மூன்று ஆப்பிள் ஐபோன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதன் விலை விவரம் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்தும். அந்த வகையில் டெஸ்டிங்கிற்காக இந்தியாவுக்கு மூன்று போன்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

A2595, A2783, A2784 ஆகிய போன்களை டெஸ்டிங் நோக்கத்திற்கான அனுப்பியுள்ளது. தற்போது அதன் விலை வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த செல்போன்களுக்கு 300 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பண மதிப்பில் இன்றைய மதிப்பிற்கு 22,410 ரூபாயும். ஆனால், இதனுடன் இறக்குமதி வரி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.

இதனால் மேலும், 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதனுடன் ஜி.எஸ்.டி. வரி சேரும்போது 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று போன்களுடன் இரண்டு புதிய ஐபேடு-களையும் இறக்குமதி செய்துள்ளது. A2588, A2589 ஆகிய இரண்டு ஐபேடுகளும் 500 டாலர் முதல் 700 டாலர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

4.7 இன்ச் டிஸ்பிளே, டச் ஐடி சென்சார் கொண்ட SE வடிவமைப்பில் SE 3 இருப்பதாக வெளியாக வதந்திகள் அடிப்படையில் நம்பப்படுகிறது.

Similar News