தொழில்நுட்பச் செய்திகள்
ஒப்போ

ரெனோ 7 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்த ஒப்போ

Published On 2022-01-24 11:31 GMT   |   Update On 2022-01-24 11:31 GMT
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெனோ 7 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுபற்றிய அறிவிப்பு ஒப்போ இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புதிய ரெனோ 7 சீரிசில் ரெனோ 7 5ஜி, ரெனோ 7 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 7 எஸ்.இ. 5ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.

வெளியீட்டு தேதி மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புது ஸ்மார்ட்போன்களின் விலை, வேரியண்ட் மற்றும் விற்பனை பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ஒப்போ ரெனோ 7 5ஜி, ரெனோ 7 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 7 எஸ்.இ. 5ஜி மாடல்களின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.



அதன்படி இவற்றின் விலை முறையே ரூ. 28 ஆயிரத்தில் துவங்கி ரூ. 31 ஆயிரமும், ரெனோ 7 ப்ரோ 5ஜி மாடல் விலை ரூ. 41 ஆயிரத்தில் துவங்கி ரூ. 43 ஆயிரமும், ரெனோ 7 எஸ்.இ. 5ஜி விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 45 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ரெனோ 7 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், ரெனோ 7 ப்ரோ 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 மேக்ஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் இதே பிராசஸரே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News