தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் ஸ்மார்ட்போன்

வெளியீட்டுக்கு முன் ஸ்மார்ட்போன் முன்பதிவை துவங்கிய சாம்சங்

Published On 2022-01-23 10:58 GMT   |   Update On 2022-01-23 10:58 GMT
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவை துவங்கிவிட்டது. இன்னும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாத நிலையில், முதற்கட்டமாக முன்பதிவுகள் மட்டும் துவங்கி இருக்கிறது. 

கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்களை சாம்சங், விரைவில் நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமின்றி கேலக்ஸி டேப் எஸ்8 மாடல்களின் முன்பதிவை சாம்சங் துவங்கி இருக்கிறது.



முன்னதாக கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மற்றும் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுக்கும் வெளியீட்டிற்கு முன்பே சாம்சங் முன்பதிவுகளை துவங்கி இருந்தது. அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், இந்த முன்பதிவுகளுக்கு சாம்சங் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. மேலும் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள சலுகை வழங்குவதாகவும் சாம்சங் அறிவித்து இருக்கிறது.

இதை கொண்டு பயனர்கள் சாம்சங் வலைதளத்தில் மற்ற சாதனங்களை வாங்க முடியும். இந்த ஆண்டிற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த நிகழ்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. 

Tags:    

Similar News