ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் உருவாகும் ஒப்போ பேட்
பதிவு: ஜனவரி 15, 2022 12:49 IST
ஒப்போ
ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒப்போ பேட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மாடல் 2022 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி இன்னமும் மர்மமாகவே உள்ளது. தற்போது இந்த மாடலின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
அதன்படி புதிய ஒப்போ பேட் மாடல் OPD2101 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது சிங்கில் கோர் சோதனையில் 4582 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 12,259 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஒப்போ பேட் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அட்ரினோ 650 ஜி.பி.யு. மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.
இந்த டேப்லெட் மாடல் முதலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். உடன் அறிமுகமாகி பின் கலர் ஓ.எஸ். 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 11 இன்ச் எல்.சி.டி. பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ பேட் மாடல் 8080 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது.
Related Tags :