தொழில்நுட்பச் செய்திகள்
சோனி டபிள்யூ.எப். 1000 எக்ஸ்.எம்.4

பிரீமியம் விலையில் சோனி நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் அறிமுகம்

Published On 2022-01-15 06:17 GMT   |   Update On 2022-01-15 06:17 GMT
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் மாடலை பிரீமியம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


சோனி நிறுவனம் டபிள்யூ.எப். 1000 எக்ஸ்.எம்.4 ட்ரூ வயர்லெஸ் நாய்ஸ் கேன்சலிங் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த இயர்பட் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 மற்றும் நாய்ஸ் ஐசோலேஷன் இயர்பட் டிப் மற்றும் ஸ்டேபில் ஃபிட் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலை விட 10 சதவீதம் அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயர்பட் ஹை-ரெசல்யூஷன் ஆடியோ வயர்லெஸ் வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள 6 எம்.எம். டிரைவர்கள் டைனமிக் சவுண்ட் வெளிப்படுத்துகிறது. மேலும் இண்டகிரேடெட் பிராசஸர் வி1 ஆடியோ தரத்தை மேம்படுத்தி, டிஸ்டார்ஷனை குறைத்து, எல்.டி.ஏ.சி. கோடெக் பிராசஸிங்-ஐ செயல்படுத்துகிறது. 



இதன் மைக்ரோபோன்கள் மிக துல்லியமாக ஆடியோ பிக்கப் செய்கின்றன. இவற்றை கொண்டு ஹேண்ட்ஸ்-ஃபிரீ அழைப்புகளிலும் தெளிவாக பேச முடியும். இதில் உள்ள நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம் மறுமுனையில் பேசுபவர் கூறுவதை எவ்வித இரைச்சலும் இன்றி கேட்க வழி செய்கிறது. இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 8 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

நாய்ஸ் கேன்சலிங் பயன்படுத்தாத போது இந்த பேட்டரி 13 மணி நேர பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்த்தால் இந்த இயர்பட் பேட்டரி 39 மணி நேரம் பயன்படுத்தலாம். மேலும் கியூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்குகிறது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.

புதிய சோனி டபிள்யூ.எப். 1000 எக்ஸ்.எம்.4 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 ஆகும். விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஜனவரி 16 ஆம் தேதி துவங்குகிறது.
Tags:    

Similar News