தொழில்நுட்பச் செய்திகள்
சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ்

120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-01-06 12:07 GMT   |   Update On 2022-01-06 12:07 GMT
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் 11ஐ மற்றும் 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி 11ஐ மற்றும் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 16 எம்.பி. செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், வி.சி. லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

இரு மாடல்களிலும் 108 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி 11ஐ மாடலில் 5160 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங், சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் மாடலில் டூயல்-செல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 



சியோமி 11ஐ மற்றும் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் மாடல்கள் பர்பில் மிஸ்ட், கேமோ கிரீன், பசிபிக் பியல் மற்றும் ஸ்டெல்த் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி 11ஐ 6 ஜி.பி.+128 ஜி.பி. விலை ரூ. 24,999 என்றும் 8 ஜி.பி. + 128 ஜி.பி. விலை ரூ. 26,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 6 ஜி.பி.+128 ஜி.பி. ரூ. 26,999 என்றும் 8 ஜி.பி.+128 ஜி.பி. விலை ரூ. 28,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட், எம்.ஐ. வலைதளம் மற்றும் எம்.ஐ. ஹோம் ஸ்டோர்களில் ஜனவரி 12 ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்கும்.
Tags:    

Similar News