தொழில்நுட்பச் செய்திகள்
ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை திடீரென குறைத்த சாம்சங்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் திடீரென குறைத்து இருக்கிறது.
தென் கொரியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து சாம்சங் விரைவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
முன்னதாக பலமுறை வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இதுமட்டுமின்றி கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 128 ஜி.பி. என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இதன் பேஸ் மாடல் விலை ரூ. 13,999 இல் இருந்து ரூ. 12,999 என்றும் 6 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ. 16,499 இல் இருந்து ரூ. 15,499 என்றும் குறைக்கப்பட்டு உள்ளது.