தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோ

குறைந்த விலை சலுகையை திடீரென நீக்கிய ஜியோ

Published On 2021-12-30 04:10 GMT   |   Update On 2021-12-30 04:10 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்த பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகை திடீரென நீக்கப்பட்டது.


இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சலுகை கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தின. ரிலையன்ஸ் ஜியோவும் தன் பங்கிற்கு பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தியது. பின், பயனர்களை மகிழ்விக்கும் நோக்கில் ரூ. 1 விலையில் சலுகையை அறிமுகம் செய்தது.

ரூ.1 ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் ஓரளவு சுமாரான பலன்களே வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சலுகை நீக்கப்பட்டது. ஜியோ ரூ. 1 பிரீபெயிட் சலுகையில் 100 எம்.பி. அதிவேக 4ஜி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது. பின் இதன் பலன்கள் 10 எம்.பி.-யாக குறைக்கப்பட்டது.



குறைந்த விலை காரணமாக இந்த சலுகை பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனினும், ரூ. 1 ஜியோ சலுகை தற்போது ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஜியோ மொபைல் செயலியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News