தொழில்நுட்பச் செய்திகள்
18 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை தேதி அறிவிப்பு
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 அல்டிமேட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடலை மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த கேமிங் ஸ்மார்ட்போனின் 18 ஜி.பி. ரேம் வேரியண்ட் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் என அழைக்கப்படுகிறது. இதன் விற்பனை இதுவரை துவங்காமல் இருந்தது. தற்போது இதன் முதல் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர், 18 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 6.78 இன்ச் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் 18 ஜி.பி. + 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் மாடலில் 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.