தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள்

மடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டு விவரம்

Published On 2021-12-14 11:28 GMT   |   Update On 2021-12-14 11:28 GMT
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2024 வாக்கில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

புதிய மடிக்கக்கூடிய ஐபோனிற்கான ப்ரோடோடைப் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கென சாம்சங் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே சாம்பில்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு வினியோகம் செய்துள்ளது. சாம்சங் மட்டுமின்றி எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய பேனல்களை வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது.



முந்தைய தகவல்களின்படி மடிக்கக்கூடிய ஐபோன் 8 இன்ச் பிளெக்சிபில் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டது. ஆப்பிள் இதுவரை மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்யாத நிலையில், சாம்சங் ஏற்கனவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்று இருக்கிறது.
Tags:    

Similar News