தொழில்நுட்பச் செய்திகள்
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸருடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

Published On 2021-12-06 10:50 GMT   |   Update On 2021-12-06 10:50 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டு உருவாகி வருகிறது.


ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ, அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சாதனங்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், ஒன்பிளஸ் 10 சீரிசில் இந்த பிராசஸர் வழங்கப்படுமா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

பீட் லௌ அறிவிப்பை தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் 10 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்றே இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்னாப்டிராகன் பிராசஸரை முடிந்தவரை ஆப்டிமைஸ் செய்யும் பணிகளில் ஒன்பிளஸ் மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரிவினர் ஈடுபட்டு வருவதாக பீட் லௌ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சாதனத்தின் மென்பொருள் அனுபவம் சீராக இருக்கும்.



முந்தைய வழக்கப்படி, ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில் புதிய குவால்காம் சிப்செட் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஒன்பிளஸ் 10 இடம்பெறும் என்றே தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகலாம்.
Tags:    

Similar News