தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோ ஜி51 5ஜி

அடுத்த வாரம் இந்தியா வரும் புது மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன்

Published On 2021-12-03 10:49 GMT   |   Update On 2021-12-03 10:49 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


மோட்டோ ஜி51 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிட்-ரேன்ஜ் மாடலான மோட்டோ ஜி51 பிளாக்‌ஷிப் மாடலான மோட்டோ ஜி200, மோட்டோ ஜி31, மோட்டோ ஜி71 போன்ற மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதுதவிர மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி51 5ஜி அறிமுகமாக இருக்கிறது.



இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 12 5ஜி பேண்ட்களுக்கான வசதி வழங்கப்படுகிறது. மோட்டோரோலா சார்பில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி51 மாடலில் 6.8 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 13 எம்.பி. செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News