தொழில்நுட்பம்
ரியல்மி

சத்தமின்றி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் ரியல்மி?

Published On 2021-11-18 04:16 GMT   |   Update On 2021-11-18 04:16 GMT
வெளிப்புறம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட புது ஸ்மார்ட்போனினை ரியல்மி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  

அண்டர் டிஸ்ப்ளே கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பரவலாக வெளியாக துவங்கிவிட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது ரியல்மி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. 

ரியல்மி நிறுவன அதிகாரியின் பதிவில் இதனை உணர்த்தும் தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன. அடுத்த ஆண்டு அண்டர் ஸ்கிரீன் கேமரா மற்றும் மடிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் புதிய உச்சத்தை தொடும் என ரியல்மி நிறுவன அதிகாரி பதிவிட்டுள்ளார். ரியல்மி இந்த தொழில்நுட்பம் அடங்கய சாதனங்களை அறிமுகம் செய்வதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.



ரியல்மியின் தாய் நிறுவனமான ஒப்போ வெளிப்புறம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரியல்மி நிறுவனமும் இதை போன்ற சாதனத்தை உருவாக்கலாம் என கூறப்படுகிறது. 

ஒருவேளை ஒப்போ மற்றும் ரியல்மி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பட்சத்தில், இரு நிறுவனங்களும் ஏற்கனவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் ஹூவாய், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் வரிசையில் இடம்பிடிக்கும்.
Tags:    

Similar News