தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

5ஜி ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்த சாம்சங்

Update: 2021-10-29 15:19 GMT
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாம்சங் தனது கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 29,999 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பு ஆப்லைன் சந்தை மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விலை குறைப்பு அக்டோபர் 28 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி 
ஸ்மார்ட்போன்
 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 24,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.இதே விலை சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாற்றப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிளேசிங் பிளாக் மற்றும் ஐசி புளூ நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News