தொழில்நுட்பம்
பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் பாரத் பைபர் சலுகைகளுக்கு வருடாந்திர கட்டண முறை அறிமுகம்?

Published On 2021-01-22 06:11 GMT   |   Update On 2021-01-22 06:11 GMT
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் பைபர் சலுகை கட்டண முறையில் புது வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பாரத் பைபர் சலுகைகளின் கட்டணத்தை வருடாந்திர அடிப்படையில் செலுத்தும் வசதியை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வசதி தற்சமயம் ரூ. 599, ரூ. 799, ரூ. 999 மற்றும் ரூ. 1499 போன்ற மாதாந்திர சலுகைகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத் பைபர் ரூ. 449 சலுகையில் வருடாந்திர கட்டண முறை வழங்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டும். புதிய கட்டண முறை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.



முன்னதாக இவை மாதாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. தற்சமயம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது 12 மாதங்களுக்கு சேர்த்தும் கட்டணம் செலுத்தும் வசதி கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு ஒரே தவணையில் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத சேவை கூடுதலாக வழங்கப்படுகிறது.

தற்சமயம் இந்த கட்டண முறை பற்றிய விவரங்கள் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெறவில்லை. முன்னதாக பாரத் பைபர் சலுகைகள் விளம்பர நோக்கில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. தற்சமயம் இவற்றின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News